மதுரை:

சாலை ஓரத்தில்  மூன்று மாத கைக்குழந்தை வீசப்பட்டு கிடந்தது மதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் பாண்டிகோவில் அருகேயுள்ள பிரதான சாலையில், 3 மாத கைக்குழந்தை வீசி எறியப்பட்டு கிடந்த்து. அந்தப் பக்கம் சென்றவர்கள், குழந்தையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்க தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் துறை துணை ஆய்வாளர் இராமலிங்கம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்த  காவலர்கள் கைக்குழந்தையை மீட்டு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், 3 கிலோ எடையுடன் குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர், மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவன், மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரி விவிலிய ராஜா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குழந்தையின் பெற்றோரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.  பெற்றோர்களை கண்டுபிடிக்க முடியாதபட்சத்தில் அக்குழந்தை, அரசு காப்பகத்தில் சேர்க்கப்படும் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.