சென்னை: சுமார்  25ஆண்டுகளுக்கு பிறகு வண்டலூர் பூங்காவில் சிம்பன்சி ஒரு குட்டியை ஈன்றெடுத்துள்ளத. கவுரி என்ற பெண் சிம்பன்சி குரங்கு கடந்த 9ந்தேதி குட்டி போட்டுள்ளது. அந்த குட்டியும், தாயும் நலமாக இருப்பதாக வண்டலூர் மிருககாட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் சிம்பன்சி எனப்படும் 4 மனித குரங்குகள்  வசித்து வருகின்றன. இங்குள்ள கொம்பே (28), கௌரி (23) எனப்படும் சிம்பன்சி தம்பதி சுற்றுலா பயணிகளிடம் மிகவும் புகழ்பெற்றது.  20 வருடங்களாக சேர்ந்து வாழும், அந்த மனிதக்குரங்குகள் இனவிருத்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட தனிமையால், கவுரி என்ற மனித குரங்கு கருவுற்றது. இந்த நிலையில், கவுரி கடந்த 9-ஆம் தேதி குட்டி சிம்பன்ஸி ஈன்றுள்ளது. தற்போது தாயும் குட்டியும் நலமாக உள்ளார்கள். கால்நடை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர் என பூங்கா நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்த சிம்பன்சி ஜோடி கடந்த 2005-ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி சிங்கப்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து  வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரவழைக்கப்பட்டது/ இந்த ஜோடிகளுக்கு இவர்களுக்கு கொம்பே – கௌரி என பெயர் சூட்டப்பட்டது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள வனத்து அதிகாரி சுதா ராமன், வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் எனக்கு பிடித்த ஒன்று – கவுரி, இந்த சிம்பன்சி பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை சிம்பைப் பெற்றெடுத்துள்ளார். இதற்காக நாங்கள்  ஒரு குழுவாக இந்த ஜோடியின் செறிவூட்டல் மற்றும் உணவை மேம்படுத்த நாங்கள் மிகவும் உழைத்தோம். குழந்தையை பார்த்துமகிழ்ச்சி அடைந்துள்ளோம். கவுரி பெற்றெடுத்த குட்டியால்,  வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவிற்கு ஒரு குழந்தை சிம்பன்சி கிடைத்துள்ளது என்றும், கடந்த 25 ஆண்டுகளில், இங்கு பிறந்த முதல் சிம்பன்சி குழந்தை என்றும் சிலாகித்துள்ளார்.