சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கை விரைவுப்படுத்தி அவரை சிறையில் அடைப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துபிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அருப்புக்கோட்டை வேட்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர், திருச்சுழி வேட்பாளர் தங்கம்தென்னரசு, விருதுநகர் வேட்பாளர் சீனிவாசன், ராஜபாளையம் வேட்பாளர் தங்கப்பாண்டியன், சாத்தூர் வேட்பாளர் மதிமுக கட்சியின் வேட்பாளர் டாக்டர் ரகுராமன் ஆகியோரை ஆதரித்து பேசியவர், திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற வேட்பாளர் மாதவராவ், சிவகாசியில் போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் அவர்களுக்கு கை சின்னத்திலும் வாக்களிக்கும்படி கூறினார்.
தொடர்ந்து பேசியவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றிருந்தார். அங்கு அவர் ஏதும் செய்யாததால், மக்கள் விரட்டியத்தனர்.அதனால்தான் அவர் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜேந்திர பாலாஜியின் அடாவடி பேச்சு, வெட்டுவேன், குத்திடுவேன் போன்ற வார்த்தைகள் அவரை ரவுடியாக அதாவது பபூன் ரவுடியாகதான் தன்னால் சித்தரிக்க முடிவதாக அவர் கூறினார். ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு அமைச்சர் பதவியை கொடுத்திருக்க மாட்டார் என்றவர், திமுக ஆட்சிக்கு வந்ததும், ராஜேந்திர பாலாஜி மீது உயர்நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கை விரைவுப்படுத்தி சிறைக்கு அனுப்புவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.