பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவிநேனி ஆகியோர் வீடுகளின் கடந்த வெள்ளியன்று வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியது தெலுங்கு படவுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளரும் இயக்குநருமான தம்மரெட்டி பரத்வாஜா தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் யாரும் சட்டவிராதமாக கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்கள் இல்லை. இங்குள்ள அனைவரும் அத்தனை ஆவணங்களையும் சரியாக பராமரிப்பது வழக்கம். இந்த தேவையற்ற ரெய்டு கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகம் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவெடுத்துள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2017 ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.