கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் பாகுபலி. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி இருந்தார். இதில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
180 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 650 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், பாகுபலி படம் லண்டனில் உள்ள பழமை வாய்ந்த ராயல் ஆல்பர்ட் ஹால்லில் சமீபத்தில் திரையிடப்பட்டது. ஆங்கில மொழி படங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு அந்த ஹாலில் இந்தியர்களுக்குக் கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் இது .