பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் கடந்த 28ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது பாகுபலி 2 திரைப்படம். வெளியானதில் இருந்து இதுவரை 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.
இந்த நிலையில் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் பாகுபலி திரையிடப்பட்டுள்ளது. இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, பாகிஸ்தானின் லாகூர், கராச்சி உட்பட முக்கிய நகரங்களில் இப்படம் வெளியாகி உள்ளது.
மற்ற நாடுகளைப்போலவே பாகிஸ்தானிலும் பாகுபலி 2 திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்ட படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.