புதுடெல்லி: இந்தியாவில் தற்போது நிலவும் கொரோனா பேரிடரைக் களைய, தொழிலதிபர் அஸிம் பிரேம்ஜி, நாளொன்றுக்கு ரூ.22 கோடி வீதம் நன்கொடையை வாரி வழங்கியுள்ளார்.
இந்திய தொழிலதிபர்களிலேயே, கொடைத் தன்மையில் பெயர் பெற்றவர், விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி. இவர் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில், தத்துவப் படிப்பு முதன்மையானதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு, கொரோனா பொது முடக்க காலத்தில், இவர் ரூ.7094 கோடிகளை நன்கொடை அளித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவின், எடெல்கிவ் ஹுருன் இந்தியா கொடைத்தன்மை பட்டியல் 2020ன்படி, அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் ரூ.1000 கோடியையும், விப்ரோ ரூ.100 கோடியையும், விப்ரோ எண்டர்பிரைசஸ் ரூ.25 கோடியையும் கொரோனாவுக்காக வழங்கியது.
இந்த ரூ.1125 கோடிகளும், விப்ரோவின் வருடாந்திர சிஎஸ்ஆர் நடவடிக்கையின் கூடுதல் சேர்க்கையாகும்.