புதுடெல்லி: ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தை, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது சென்னை அணி.
முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி, 20 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. அந்த அணியின் வார்னர் & மணிஷ் ஆகியோர் அரைசதங்கள் அடித்தனர்.
பின்னர், சற்று சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணியில், தொடக்க வீரர்களே கிட்டத்தட்ட வெற்றியை உறுதிசெய்து விட்டனர். ருதுராஜ், 44 பந்துகளை சந்தித்து, 12 பவுண்டரிகளுடன் 75 ரன்களை விளாசி, வெற்றிக்கு பெரிதும் துணை செய்தார்.
மற்றொரு தொடக்க வீரர் டூ பிளசிஸ், 38 பந்துகளில், 1 சிக்ஸர் & 6 பவுண்டரிகளுடன் 56 ரன்களை அடித்தார். இவர்கள், இருவருமே ஆட்டத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டதால், அதன்பிறகு வந்த மொயின் அலி, ஜடேஜா மற்றும் ரெய்னாவிற்கு பெரிய வேலை எதுவும் இருக்கவில்லை.
முடிவில், டெல்லி அணியைப் போலவே 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து, 18.3 ஓவர்களிலேயே, 173 ரன்களை அடித்து, 7 விக்கெட்டுகளில் வென்று, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது சென்னை அணி.