
பிப்ரவரி 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன் இந்தி ரீமேக் உரிமையை சமீபத்தில் பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாம் கைப்பற்றியுள்ளார்.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றப் பலரும் போட்டியிட்டனர். இறுதியாக ‘ஜிகர்தண்டா’, ‘ஆடுகளம்’ படத்தின் தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.
பிஜுமேனன் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமாரும் நடிக்கவுள்ளதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்தப் படத்தில் சரத்குமார் நடிக்கவில்லை.
பின் ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் ஆர்யாவோ “‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கவில்லை” என்று பேட்டியே கொடுத்துவிட்டார். இதனால் சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
Patrikai.com official YouTube Channel