
ஜனநாதன், விவேக், தாமிரா, கே.வி.ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, தற்போது நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி எனக் கடந்த சில மாதங்களில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் அடுத்தடுத்த மரணங்கள் சக கலைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இந்நிலையில்,தமிழ் சினிமாவில் ஆறு, காக்கி சட்டை, கருப்பன், சதுரங்க வேட்டை,என் ஆளோட செருப்பை காணோம் போன்ற படங்கள் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள ஐயப்பன் கோபி மாரடைப்பால் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.ஆனால்,இந்த செய்தி இப்போது தான் தெரிய வந்துள்ளது.
கே. பாலசந்தரின் ஜாதிமல்லி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஐயப்பன் கோபி.
[youtube-feed feed=1]