புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பணிக்காலம் நவம்பர் 17 அன்று முடிவுக்கு வருவதால், பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னதாகவே அயோத்தி நிலம் சம்மந்தமான வழக்கில் தீர்ப்பளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

கடந்த வாரம் உச்சநீதிமன்றமானது மீண்டும் அக்டோபர் 18க்குள் வாதங்களை முழுமையாக வைப்பதற்கு வலியுறுத்தியது. இன்னும் உறுதியாக அதன்பின் ஒருநாள் கூட வாதங்களை வைக்க வாய்ப்பிருக்காது எனவும் கூறியது.

ஆகவே,நவம்பர் 13-17 தேதிகளில் தீர்ப்பு வாசிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

உள்துறை செயலாளர், அனைத்து மாநில அரசுகளையும் கண்காணிப்பைப் பலப்படுத்தவும் கோவில்கள் மற்றும் மசூதிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் கேட்டுள்ளார். மேலும் அவர், உளவுத்துறையையும் நவம்பர் முதல் வாரத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளை அடையாளம் கண்டு பாதுகாப்பைப் பலப்படுத்தவும் கேட்டுள்ளார்.