அயோத்தி:

த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி விரவில் நடைபெற உள்ள நிலையில், கோவில் மதகுரு ஒருவர் மற்றும் 16 காவலர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் தற்போது வரை  29,997 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்  375 பேர் அயோத்தியை சேர்ந்தவர்களாவார்கள். இந்த நிலையில், அயோத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 5 அன்று நடைபெற உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க  இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி  உள்பட 50 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,  ராமர்கோவில் அடிக்கல் நாட்டு  நிகழ்ச்சிக்காக பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலர்களில்  16 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏஉறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும், ராமர் கோயிலின் தலைமை மதகுருவின் உதவியாளரான பிரதீப் தாசுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த தகவலை கோயில் அறக்கட்டளை  உறுதி செய்துள்ளது.
இருந்தாலும், கோவில் அடிக்கல் நாட்டும் பணி  திட்டமிட்டபடி நடைபெறும் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறும் விழாவுக்கு முன்னதாக மூன்று நாள் நீளமான வேத சடங்குகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்குகிறது.