அயோத்தி நில ஊழல் : உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த பிரியங்கா வலியுறுத்தல்

Must read

டில்லி

ராமர் கோவில் நிலம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

அயோத்தியில் உள்ள பேக் பைசி என்னும் இடத்தில் ராமர் கோவில் கட்ட 1,208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.   இந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி ஆகு.  ஆனால் இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.. 

இதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பவன்சிங் உள்ளிட்டோர் புகார் எழுப்பி உள்ளனர்.   இந்த ஊழல் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, “அயோத்தியில் ஒரு நிலத்தை இருவர் ரூ.2 கோடிக்கு வாங்கி உள்ளனர்.  அதற்கடுத்த 5 நிமிடங்களில் அதே நிலத்தை ராமர் கோவில் அறக்கட்டளை ரூ.18.50 கோடிக்கு வாங்கி உள்ளது.   5 நிமிடங்களில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

யாரால் இதை ந்ம்ப முடியும்? இரு பத்திரங்களில் ஒரே நபர்கள் சாட்சிகளாகக் கையெழுத்து இட்டுள்ளனர்.  நிலத்தில் விலை ஏறி விட்டதாக ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவிக்கிறது.   ஆனால் ராமர் கோவிலில் இருந்து வெகுதூரத்தில் உள்ள அந்த பகுதியில் நிலத்தின் விலை ரூ.5 கோடிக்குள்தான் இருக்கும்.

இந்த ஊழல் கடவுல் நம்பிக்கையின் பெயரில் நடந்துள்ளதால் இது கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையின் மீது நடந்த தாக்குதல் ஆகும்.  இந்த அறக்கட்டளை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டது.  எனவே இந்த ஊழல் குறித்டு உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

 

More articles

Latest article