டெல்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய  நிலம் தொடர்பாக உச்சநீதி மன்றம் அமைத்துள்ள 3 பேரைக்கொண்ட மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழர்கள் என்பது பெருமைக்குரியது.

உலக நாடுகளிலேயே தமிழர்களுக்கும், தமிழுக்கும் தனி மகத்துவம் உண்டு என்பதை அனைவரும் அறிவோம். அதுபோல இன்றளவும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் தமிழர்களின் திறமையை மெச்சும் வகையில்  உயர்ந்த பதவியில் உட்கார வைத்து கவுரவித்துவருகின்றன.

இந்த நிலையில், தற்போது உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கை முடிவுக்கு கொண்டு வர 3 மத்தியஸ்தர்களை நியமனம் செய்துள்ளது.

இந்த 3 மந்தியஸ்தர்களும் தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் என்பது பெருமைக்குரியது.  தமிழர்கள் எதற்கும் மயங்கமாட்டார்கள், அஞ்ச மாட்டார்கள்,  தங்களது பணியை திறம்ப செய்வார்கள் என்பதை உலகமே அறிந்த நிலையில், இன்று உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வும், வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய வழக்குக்காக தமிழர்களை நியமித்து கவுரவித்து உள்ளது.

உச்சநீதி மன்றம் நியதித்துள்ள மத்தியஸ்தர்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கலிபுல்லா தமிழகத்தை சேர்ந்த தமிழர்.

அதுபோல, வாழும் கலை அமைப்பை நிறுவி, சமூகப்பணியாற்றி வரும் சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் தமிழகத்தை சேர்ந்தவர்தான். அதுபோல மூத்த வழக்கறிஞரான  ஸ்ரீராம் பஞ்சுவும் தமிழகத்தை சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  குழுவினர் ஒரு வாரத்திற்குள் தங்களது பணியை தொடங்க வேண்டும் என்றும்,  8 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், விசாரணை உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நடைபெறும் என்றும், அதற்காக தேவையான உதவிகளை உ.பி. மாநில அரசு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.