புதுச்சேரி:
புதுச்சேரி அருகே முருகனுக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

புதுச்சேரி அடுத்த கூடப்பாக்கத்தில் தைபூச விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி, முருகப்பெருமானுக்கு முகக்கவசம் அணிவித்து வீதியுலா அழைத்து சென்று நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.