அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கம் அமைப்பு ஒன்று, சுப்பிரமணியன் சுவாமிக்கு “தமிழ் ரத்னா” விருது அளித்துள்ளது. .
“ஊழலுக்கு எதிராக செயல்படுவதாலும், இந்திய ஆட்சி முறையில் வெளிப்படைத்தன்மை தேவை என்பதை வலியுறுத்துவதாலும் சு.சுவாமிக்கு தமிழ்ரத்னா விருது கொடுத்தோம்” என்று அந்த சங்கத்தின் தலைவர் பிரகாஷ் எம். ஸ்வாமி தெரிவித்துள்ளார்.
இந்த விருது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் கிண்டலாகவும், கடுமையாகவும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.
“தமிழகத்தில் இத்தனை ஆண்டுகள், அரசியல் (!) செய்து வந்தும், தமிழை கற்கவில்லை சு.சுவாமி. இன்னமும் “அவா, இவா, சொல்றா…” என்றே சு.சுவாமி சொல்றா.. ஸாரி… சொல்றாரு. இந்த ஆளுக்கு தமிழ் ரத்னா விருதா?”
”இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது, படகையும் கைப்பற்றுங்கள் என்று தான் ஆலோசனை சொன்னதாக சு.சுவாமியே கூறினார். இப்படி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த இவருக்கு விருதா? ”
“அமெரிக்காவுல இருக்கிற லெட்டர் பேட் அமைப்புல இது ஒண்ணு. இவங்க விருது கொடுக்கிறேன் வாங்கன்னு யாரையும் அழைக்கிறதில்லை. அமெரிக்காவுக்கு சுத்துப்பயணம் வர்ற விஐபிகளை பிடிச்சு, அவார்டை திணிச்சிருவாங்க.. அம்புட்டுதான்!”
– இப்படி பல்வேறு பதிவுகள், சு.சுவாமி – தமிழ் ரத்னா விருதை விமர்சித்து பேஸ்புக்கில் உலா வருகின்றன.