வைகோ ஆறுதல் சொன்னதை வெளியிடாததுதான் ஊடக தர்மமா?

Must read

நெட்டிசன் பகுதி:
சுரேஷ் பாபு தாயகம் (Suresh Babu Thayagam) அவர்களின் முகநூல் பதிவில் இருந்து:
சாலையோரத்தில் உறங்கி கொண்டிருந்த அப்பாவி மக்களின் மீது போதையில் ஒட்டிவந்த சொகுசு காரை ஏற்றி கொன்ற மத்திய ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளை சல்மான்கானை குற்றமற்றவன் என்று நீதிமன்றம் விடுவித்தது அன்று!
தர்மபுரியில், தங்கள் சுய வெறுப்புகளுக்காக மூன்று அப்பாவி கல்லூரி மாணவிகளை உயிரோடு கொளுத்தியது ஒரு கூட்டம் அன்று!
மதுரையில், தங்கள் குடும்ப அரசியலுக்காக மூன்று அப்பாவி நிருபர்களை உயிரோடு கொளுத்தியது ஒரு கூட்டம் அன்று!
இவையெல்லாம் பற்றி பொங்கி ஆர்பரித்து நீதி கேட்டு விவாதம் நடத்தினால் அது ஊடக தர்மம்..,
ஆனால்,
நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை அருகில் வாகனம் சென்றுகொண்டிருக்க.. திடீரென ஒருவர் குறுக்கே வர.. அவர் மீது கார் மோதியது. அவர் பலியானார்.
அந்த  சம்பவத்தை, “வைகோவின் வாகனம் மோதி ஒருவர் பலி” என சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

பலியானவர் வீட்டில் வைகோ ஆறுதல் கூறியபோது..
பலியானவர் வீட்டில் வைகோ ஆறுதல் கூறியபோது..

வைகோவின் பெயரில் இல்லாத வாகனம் அது,  விபத்து நிகழ்ந்த போது வைகோ அந்த வாகனத்தில் பயணிக்கவேயில்லை!
அவ்வப்போது அவர் பயன்படுத்தியது தான், அந்த ஓட்டுனர் வைகோவின் ஓட்டுனர்களில் ஒருவர் தான்.
விபத்து நடந்தவுடன் ஓட்டுனரும் அவருடன் இருந்தவரும் சட்டப்படி செய்ய வேண்டிய அனைத்தும் செய்துள்ளனர். அவசர ஊர்தியை அவர்களே அழைத்துள்ளனர். அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு அவர்களே சென்றுள்ளனர். வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தான் அங்கு நடந்துள்ளது.
அதன்பின் இப்போது, விபத்தில் இறந்தவரின் வீட்டிற்க்கு வைகோ அவர்களே சென்று, விபத்திற்காக வருத்தம் கோருவதாகவும், அக்குடும்பத்திற்கான உதவிகள் செய்வேன் எனவும் வாக்குறுதி தந்ததுடன், தன்னாலான உதவியை தற்சமயம் செய்துள்ளார். உரிய காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர உதவுவதாகவும் கூறியுள்ளார்.
இப்போது, இந்த செய்தியை அந்த ஊடகங்கள் வெளியிடுமா?
 

More articles

Latest article