சென்னை
நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் தான் புனித நீராடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நாத்திக கருத்துக்களைப் பேசி வரும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது.
இதை பார்த்த பலரும் நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் புனித நீராடி இருக்கிறீர்களே? உங்களை என்ன சொல்வது? என்று கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இ து போலி புகைப்படம் என்றும் தாம் புனித நீராடவில்லை எனவும் பிரகாஷ்ராஜ் காட்டமாக தெரிவித்து உள்ளார்.
மேலும் பிரகாஷ்ராஜ்,
“போலி தகவல் எச்சரிக்கை. இப்படி போலி புகைப்படம் வெளியிட்டு இருப்பது வெட்கக்கேடு. இது குறித்து புகார் செய்து இருக்றேன். சம்பந்தபட்டவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இந்த புகைப்படத்தை உருவாக்கி வைரலாக்கி உள்ளனர்.
என்று தெரிவித்து உள்ளார்.