சென்னை:
வின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்புக்குப் பின் தமிழகத்தில் ஆவின் பால் தினசரி விற்பனை 26 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், விலைக்குறைவுக்கு பின் கடந்த மே 23ஆம் தேதி சென்னையில் 15.4 லட்சம் லிட்டரும், மே 22ஆம் தேதி பிற மாவட்டங்களில் 12.59 லட்சம் லிட்டரும் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தினசரி பால் கொள்முதல் 36 லட்சம் லிட்டரிலிருந்து 40 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

திமுக தேர்தல் அறிக்கையில், ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்ததும், முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் விலை குறைத்து கையெழுத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.