ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘மாஃபியா’ படத்துக்குப் பிறகு அருண் விஜய் – ப்ரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சக்திவேல், எடிட்டராக ஆண்டனி, கலை இயக்குநராக சக்தி வெங்கட் ராஜா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். அவர்தான் ராதிகா சரத்குமார், இவர் அனேகமாக ப்ரியா பவானிசங்கர் தாயாராக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சென்னையில் மார்ச் 3 தொடங்கப்பட்டது. இது அருண் விஜய் நடிப்பில் உருவாகும் 33-வது படமாகும்.

இந்த படத்தின் பூஜை மார்ச் துவக்கத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு பழனியில் தொடங்கியுள்ளது என்று அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]