petrol
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.06-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.94-ம் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.06-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.94-ம் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.62.19 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.50.95 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.61.64 ஆகவும், டீசல் விலை ரூ.51.78 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30ம் குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.