தொகுதி மாற்றம் – அதிமுக அறிவிப்பு

Must read

kittuகூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகுதி மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளராக கிட்டுசாமி போட்டியிடுகிறார். மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒட்டன் சத்திரம் தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதி ஒதுக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளராக சக்கரபாணி மீண்டும் போட்டியிடுகிறார். இவர் 1996. 2001, 2006, 2011 என 4 முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, அதே கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளரான கிட்டுசாமியை அதிமுக தலைமை நிறுத்தியுள்ளது.
தமக்கு ஒதுக்கப்பட்ட வேலூர் தொகுதியின் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளராக கார்த்திக்யேன் போட்டியிடுகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அப்துல் ரகுமான் போட்டியிடுகிறார். வேலூர் அதிமுக வேட்பாளராக நீலகண்டன் அறிவிக்கப் பட்டிருந்தார்.

More articles

1 COMMENT

Latest article