notification
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான அரசிதழ் அறிவிக்கையை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் இன்று வெளியிட்டார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்வை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 4 ஆம் தேதி வெளியிட்டது. அன்று முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இந்நிலையில் தேர்தல் தொடர்பான அறிவிக்கை தமிழக தேர்தல் ஆணையர் ஞானதேசிகன் அரசிதழில் இன்று வெளியிட்டார்.
அதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை தேர்தவு செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் செயலர் மாலை மாலிக் மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஏப்ரல் 22) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப்பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.