images
திருப்பூர் தெற்கு பகுதி தேமுதிக மாவட்டச் செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியன் திமுகவில் இணைந்தார். மதிமுகவின் கட்டுப்பாட்டில் தேமுதிக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருப்பூர் தெற்கு மாவட்டம், மாவட்ட கழக பொறுப்பாளர்களாக சேகர் (திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர்), முத்துவெங்கடேஷ் (திருப்பூர் தெற்கு மாவட்ட கழக துணைச்செயலாளர்) ஆகியோர் இன்று (22.04.2016) முதல் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு மாவட்டம், பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என கூறியுள்ளார்.