அச்சிறுப்பாக்கத்தில் மாநாடு – வெள்ளையன்

Must read

velliyan
வணிகர் தினத்தை முன்னிட்டு 33வது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாடு மேல்மருவத்தூரை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் வரும் 05.05.016 வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனை அப்பேரவையின் தலைவர் த.வெள்ளையன் இன்று சென்னையில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது தெரிவித்தார்.
மேலும், நம் நாட்டில் எல்லாத் தொழில்களிலும் அந்நியர் ஆதிக்கம் ஏற்பட்டு வருவதற்கு உலக வர்த்தக ஒப்பந்தமே காரணம். விவசாயம், வணிகர், நெசவு, சிறு தயாரிப்பு தொழில்கள் என் அநேகமாக நம் நாட்டு மக்களின் அனைத்துச் சுய தொழில்களும் குடும்பத் தொழில்களாகவே நடந்து வருகின்றன. இந்த தொழில்களில் அந்நிய ஆதிக்கம் ஏற்பட வழிவ வகுத்துக் கொடுத்தவர்கள் மத்திய ஆட்சியாளர்கள்தான்.
இதன் விளைவாக நிலம் வைத்து விவசாயம் செய்து வந்த விவசாயிகள் சித்தாள்களாக மாறி வருகின்றனர். விவசாயிகளின் குடும்ப பெண்கள் 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அநியாயத்தை மாநிலக் கட்சிகளும் கண்டிக்கவில்லை. எதிர்க்கவில்லை. மக்கள் நலன் காக்க, தேச நலன் காக்க இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

More articles

Latest article