சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் 338 ரன்களை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த டெஸ்ட் தொடரில், அந்த அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும் இது.
ஆஸ்திரேலியாவின் புதுமுக துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி 62 ரன்களை எடுத்து அவுட்டானார். மார்னஸ் லபுஷேன் 91 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அசராது ஆடிவந்த கேப்டன் ஸ்மித் 131 ரன்களுக்கு ரன்அவுட் செய்யப்பட்டார்.
இறுதியில், 338 ரன்களைச் சேர்த்த நிலையில், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில், 200 ரன்களே ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ரன்களாக இருந்தது.
இந்தியா தரப்பில், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு 4 விக்கெட்டுகளும், பும்ரா & சைனிக்கு தலா 1 விக்கெட்டும், சிராஜுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன. முக்கியப் பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு இந்தமுறை விக்கெட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியுள்ளது. ரோகித் ஷர்மாவும் ஷப்மன் கில்லும் களத்தில் இறங்கியுள்ளனர்.