கான்பெரா: பெண்கள் முத்தரப்பு டி-20 தொடரில், இந்தியப் பெண்கள் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய பெண்கள் அணியிடம் தோல்வியடைந்தது.

முதல் போட்டியில், இங்கிலாந்தை வென்ற இந்திய அணி, ‍அதே நம்பிக்கையுடன் இன்று ஆஸ்திரேலியாவை சந்தித்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக, மந்தனா 35 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆஸ்திரேலியாவின் எலிசா பெர்ரி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்து வென்றது. 4 இந்திய விக்கெட்டுகளைக் கைப்பற்றிய எலிசா, பேட்டிங்கிலும் 49 ரன்களை எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.