கான்பெர்ரா

ந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வரும் அக்டோபர் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

சென்னையில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.  இந்த தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.

ஏற்கனவே இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் உலகக்கோப்பை தொடருக்கான   15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தன. இன்று ஆஸ்திரேலிய அணியும் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு பேட் கம்மின்ஸ் தலைமை தாங்குகிறார். அணியில் டிம் டேவிட், மார்னஸ் லபுஸ்சாக்னே ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

அணியில்

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்க்லிஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க்

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.