உலகக்கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியல் இன்று வெளியானது.

அக்டோபர் 5 ம் தேதி துவங்க உள்ள உலகக்கோப்பை போட்டிகள் நவம்பர் 19 ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவின் தலைவரான அஜித் அகார்கர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.

வீரர்கள் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.