மெல்போர்ன்,

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதி போட்டிக்கு பிரபல டென்னிஸ் வீரர்களான   நடால், டிமிட்ரோவ், சிலிக், எட்மண்ட் முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில், கிராண்ஸ் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளின் நான்கு போட்டிகள் நேற்று நடைபெற்றன.

நடால்

இந்த போட்டியின்போது ஒரு  ஆட்டத்தில்  ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அர்ஜென்டினாவின் டியேகோ ஸ்வார்ட்ஸ்மேன்-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தின்போது முதல் செட்டை 6-3 செட் கணக்கில் நடால் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து இரண்டாவது சுற்றின்போது சுதாரித்த ஆடிய அர்ஜென்டினா வீரர் டியேகோ நடாலுக்கு சவாலாக திகழ்ந்தார். இதன் காரணமாக இரண்டாவது சுற்று டை பிரேக்கரில் முடிந்தது.

அதைத்தொடர்ந்து நடால் சிறப்பாக விளையாடி, 3-வது செட்டை 6-3 எனவும், 4-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

கிரிகோர் டிமிட்ரோவ்

இன்னோரு ஆட்டத்தில் டென்னிஸ் தர வரிசையின் 3ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ்,  ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ்-ஐ எதிர்கொண்டார். இதிலும் ஒரு டை பிரேக்கரில் முடிந்தது. அதைத்தொடர்ந்து இறுதியில், பல்கேரிய வீரர் டிமிட்ரோவ்  7(7) – 6(3), 7(7) – 6(4), 4 – 6, 7(7) – 6(4) என வெற்றி பெற்று காலிறுதிக்கு  தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில்தென்ஆப்பிரிக்காவின் கைல் எட்மண்ட்டுக்கும்,  இத்தாலியின் அன்டிரியாஸ் செபிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எட்மண்ட் வெற்றிபெற்று கால் இறுதிபோட்டிக்கு தேர்வானார்.

கைல் எட்மண்ட்

4வதாக நடைபெற்ற ஆட்டத்தில்,  போஸ்னியாவின் மரின் சிலிக்-ஐ எதிர்த்து, ஸ்பெயின் நாட்டின் பப்லோ கரேனோ பஸ்டாவை களமிறங்கினார். இதில்  இதில் மரின் சிலிக் வெற்றி பெற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

மரின் சிலிக்