ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 52.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் மாரடைப்பால் இறந்த சில மணிநேரங்களில் ஷேன் வார்ன் மரணம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராட் மார்ஷ் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்து வார்ன் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார், இதுவே அவரின் கடைசி பதிவாக உள்ளது.

“ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. இளைஞர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்தார். ராட் கிரிக்கெட்டில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார் அவரது குடும்பத்திரனருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று அதில் பதிவிட்டிருந்தார்.

‘வார்னி’ என்று அன்புடன் அழைக்கப்படும் ஷேன் வார்ன் உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னராக கருதப்படுகிறார்.

1992 ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வார்ன் 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார்.

708 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் முரளீதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார்.