இலங்கைக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது இலங்கை.

நிஷங்கா 40 ரன்களும், அசலாங்க 38 ரன்களும் எடுத்தனர்.

158 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே ரன் சேர்ப்பில் ஈடுபட்டது.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஃபின்ச் – ஸ்டொய்னிஸ் ஜோடி 4.1 ஓவரில் 69 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை வெற்றிபெற செய்தது.

ஸ்டொய்னிஸ் அபாரமாக விளையாடி 18 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிஸ்சர்கள் அடித்து ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார்.

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஃபின்ச் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.