டில்லி

நேற்று நடந்த ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 35 ரன்கள் வித்யாசத்தில் வென்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரெலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் போட்டியிட்டது.   இதில் ஐதராபாத் மற்றும் நாக்பூரில் நடந்த 2 போட்டிகளில் இந்தியா வென்றது. ராஞ்சி மற்றும் மொகாலியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.   இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

நேற்று டில்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இறுதி மற்றும் ஐந்தாம் ஒரு நாள் போட்டி நடந்தது.   இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.  இந்த அணியின் தொடக்கா ஆட்டககாரர்களான கவஜா 106 ரன்களில் பின்ச் 43 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன் பின் ஹேண்ட்ஸ்கோம்ப் 53 ரன்களும், மாக்ஸ்வெல் ஒரு ரன்னும் ஸ்டாய்னிஸ் மற்றும் டர்னர் தலா 20 ரன்களும், எடுத்து ஆட்டம் இழந்தனர்.   கேரி 3 ரன்களிலும் ரிசர்ட்சன் 29 ரன்களிலும் கும்மின்ஸ் 15 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.   லையான் ஒரே ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்திருந்தது.   அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.    இந்திய அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களான ரோகித் 56 ரன்களுடனும் தவான் 12 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து கோலி 20 ரன்கள், ரிஷப் பண்ட் 16  ரன்கள், விஜய்சங்கர் 16 ரன்கள், ஜாதவ் 14 ர்ன்கள், ரவீந்திர ஜடேஜா 10 ரன்கள், குமார் 46 ரன்கள், சமி 3 ரன்கள் மற்றும் குல்தீப் யாதவ் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். போட்டி முடிவில் பும்ரா 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

50 ஓவர்கள் முட்வில் இந்தியா அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது.  அதை ஒட்டி ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.   கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடந்த போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.