டில்லி

க்களவை தேர்தலில் அரியானா மாநிலத்தில் கூட்டணி அமைக்க காங்கிரசுக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று டில்லி மாநில மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த ஏழாம் கட்ட தேர்தலில் டிலியி உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.    இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க டில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி முயன்றது.

ஆனால் அதற்கு காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.  அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இது குறித்து ஆலோசித்த பிறகு ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார்.

அதை ஒட்டி ஆம் ஆத்மி கட்சி டில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது.   ஆயினும் ஆம் ஆத்மி தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில், “அரியானா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஜனநாயக ஜனதா கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என நான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுக்கிறேன்.   டில்லியில் தனித்து நிற்பது வேறு விவகாரம்.  எனவே மக்கள் அதை குறித்து கவலைப்பட தேவை இல்லை.

இந்த கூட்டணி அமைந்தால் அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பாஜக தோற்கடிக்கப்படுவது உறுதி.   பாஜகவை தோற்கடிப்பது முக்கியமானதாகும்.   தற்போது நாடு இரு பக்கமாக பிரிந்துள்ளது.   ஒரு பக்கத்தில் உள்ளோர் மோடியின் பக்தர்கள்.   அவர்கள் மோடியை மீண்டும் பிரதமராக்கவே வாக்களிப்பார்கள்.

மற்றொரு பக்கத்தில் மோடியை தோற்கடிக விரும்புவோர் உள்ளனர்.   இவர்களே எண்ணிக்கையில் அதிகமானோர் ஆவார்கள்.   எதிர்க்கட்சிகள் இவர்களை தனித்தனியாக பிரிய விடாமல்  ஒன்றிணைத்தால்  மோடி – அமித்ஷாவின் ஜோடி நட்டை விட்டே ஓடி விடும்.” என தெரிவித்துள்ளார்.