மெல்போர்ன்,

ஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

பரபரப்பாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வாவ்ரிங்கா, டேவிட் கோபின் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் 9-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா, அமெரிக்காவின் டென்னிஸ் சான்ட்கிரேனை எதிர்த்து களமிறங்கினார். விறுவிறுப்பான நடைபெற்ற விளையாட்டில், வாவ்ரிங்காவை சான்ட் கிரேன் திக்குமுக்காட செய்தார்.

சான்ட்கிரேனின் அதிரடி ஆட்டத்தை வாவ்ரிங்காவால் எதிர்கொள்ள முடியாமல் திணறினார். இதனால் 2-6, 1-6, 4-6 என வீழ்ந்து 2-வது சுற்றோடு வாவ்ரிங்கா வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான டேவிட் கோபின் ஜூலியன் பென்னேடேயாயுவை எதிர்கொண்டார். இதில் டேவிட் கோபின் 6-1, 6(5) – 7(7), 1-6, 6(4)-7(7) என தோல்வியடைந்தார்.

2-ம் நிலை வீரரான பெடரர் 6-4, 6-4, 7(7)-6(4) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் காஸ்குயட், அலெக்சாண்டர் ஸ்வெரேவ், டெல்போட்ரோ, ஜோகோவிச், பெர்டிச், தியெம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.