சிட்னி

ஸ்திரேலிய அரசு கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள் தங்கள் நாட்டுக்குள் வர அனுமதி அளித்துள்ளது.

தற்போது இந்தியாவில் அதிக அளவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.    இதில் கோவாக்சின் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்..   இந்த தடுப்பூசிக்கு இன்னும், உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்காமல் உள்ளது.   விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சம் காரணமாக சுமார் ஒன்றரை வருடங்களாகச் சர்வதேச விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  சமீபகாலமாக அங்கு கொரோனா பரவல் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  குறிப்பாகப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி ஆஸ்திரேலியா வரும் பயணிகள் இந்தியத் தடுப்பூசியான கோவாக்ஸின் செலுத்திக் கொண்டால் எவ்வித தட்டுப்பாடும் இன்றி பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..   மேலும் கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த மாடடார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டுப் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.   உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்காமல் இழுக்கடித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.