சென்னை:  மலையாளிகளின் பாரம்பரியம் மிக்க  பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி அறிவித்துள்ளாா்.

ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் பண்டிகை. சாதி மத வேறுபாடிண்டி கேரள மாநில மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்த நாளாகவும் வாமணன் அவதரித்த நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த பண்டிகையையொட்டி  தமிழகத்தில் வாழும் கேரள மக்களுக்காக கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு வருகிறது.

ஓணம் திருநாளுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அளித்து, அதற்கீடாக அம்மாதத் திலோ அல்லது அதற்கடுத்த மாதத்திலோ ஒரு சனிக்கிழமையை பணி நாளாக அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 31-ஆம் தேதி (திங்கள்கிழமை), ஓணம் திருநாளை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த உள்ளூா் விடுமுறைக்கு ஈடாக செப்.12-ஆம் தேதி (சனிக்கிழமை), சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இதுபோல, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் விடுமுறை விடப்படுவது வழக்கமாகும்.