சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 25ந்தேதி அரசு போக்குவரத்து பனிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி நிறுத்தப்பட்ட போக்குவரத்து சுமார் நாலரை மாதங்கள் கடந்தும் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆனால், அரசு பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் காரணமாக தனியார் வாகனங்ஙகள் மாவட்டத்திற்குள்ளேயே இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அரசு போக்குவரத்தை இயக்க தமிழக அரசு மறத்து விருகிறது.
இந்த மீண்டும் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என போக்குவரத்து துறை ஊழியர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.
திமுக தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் ‘கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நீண்ட நாட்களாக பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
இதற்கிடையே, அரசு பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து போக்குவரத்துக் கழகங்கள் இயக்கலாம் என்ற தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது இது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் உடனடியாக பேருந்து சேவையை தொடங்கக் கோரியும், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள புதிய அரசாணையை திரும்ப பெறக் கோரியும் வரும் 25-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.