சென்னை:
நாளை மறுநாள் முதல் வழக்கறிஞர்கள்  போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ban
போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்களை அகில இந்திய பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் பலரை சஸ்பெண்ட் செய்ய இருப்பதாக அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையில் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் குழுவினர், டெல்லி சென்று அகில இந்திய பார் கவுன்சில் தலைவரை சந்திக்க முயற்சித்தனர்.
போராட்டத்தை கைவிட்டால் சந்திப்பதாக கூறிய பார் கவுன்சில் தலைவர், தமிழக பார் கவுன்சில் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று சந்தித்தார்.
டெல்லியில் பார்கவுன்சில் நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக வழக்கறிஞர்கள் சங்க குழுவினருடன்,  தமிழக பார்கவுன்சில் நிர்வாகிகள் செல்வம், பிரபாகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் 126 பேரின் சஸ்பெண்டை  ரத்து செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
டெல்லியில் இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு,
நாளை மறுதினம் முதல் (12ந்தேதி)  தற்காலிகமாக நீதிமன்ற புறக்கணிப்பை கைவிடுவது என முடிவெடுத்து உள்ளதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் திருமலைராஜன் கூறினார்.