ஆகஸ்டு-10: ‘காட்டு ராஜா’ உலக சிங்கங்கள் தினம் இன்று

Must read

கஸ்டு 10ந்தேதியான இன்று இன்று உலகம் முழுவதும் ஆண்டுதோறும் உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. வனவிலக்குகளுக்கு ராஜாவான காட்டு ராஜாவை கவுரவிக்கும் வகையில் இன்றைய தினம் வனவிலங்கு ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிங்கத்தை பாதுகாக்கும் வகையில் உருவான  ‘பிக் கேட் ரெஸ்க்யூ’ என்னும் பிரத்யேக அமைப்பின் முயற்சியால் உலக சிங்கம் தினம் உருவாக்கப்பட்டது.  இன்றைய நாளில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இந்த அமைப்பினர் ஒன்று கூடி அழிக்கப்பட்டு வரும் சிங்கத்தை பாதுகாத்து கவுரவிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சிங்கம் என்றாலே அதற்கு தனி மரியாதை உண்டு. பண்டைய கால அரசர்கள் காலத்திலேயே சிம்மம் என்றால் தலைவன் என்றே அர்த்தம். அரசர்கள் அமரும் இடத்துக்கு சிம்மாசனம் என்றும், எதிரிகளுக்கு பயத்து ஏற்படுத்தும்போது, அவன் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்று சிங்கத்தையே நமது மக்கள் அடையாளப்படுத்தி உள்ளனர்.

ஆனால், சமீப பல ஆண்டுகளாக மக்கள் பெருக்கம் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு, நகரமய மாக்கல் நடைபெற்று வருவதால், சிங்கம் உள்பட வன விலங்குகளும் மனிதர்களால் வேட்டை யாடப்பட்டு வருகிறது. உலகில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 2 லட்சத்துக்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இன்று வெறும் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் 500-க்கும் குறைவாகவே உள்ளன.

இதன் காரணமாக, சிங்கங்களைப் பாதுகாக்கவும், அது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அடைய வும் கென்யா வன உயிரின ஆர்வலர்களின் முயற்சியால் இன்றைய நாள் (ஆகஸ்டு 10) சிங்கங்களின் நலன் பேணும் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் தேசங்களின் கொடிகள் , சின்னங்கள் ஆகியவற்றில் சிங்கத்தின் உருவம் இடம்பெறுகிறது. சிங்கங்களில் வாழிடம் அழிக்கப்படுவது, உணவு கிடைக்காமல் போவது, மனிதர்களினால் உண்டாக்கும் பிரச்சினை ஆகியவையே தற்போது சிங்கங்களுக்கான தலையாய பிரச்சினைகளாக இருக்கின்றன.

ஆசிய சிங்கங்கள் இன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே உள்ளன. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்டன. திடீரென பரவும் தொற்றுநோய்கள், ஒரே குடும்பங்களுக்குள் நேரும் இனச்சேர்க்கையினால் பலவீனம் அடைதல், இடநெருக்கடிகளால் காடுகளை விட்டு வெளியேறும் சிங்கங்களால் ஏற்படும் மனித – விலங்கு மோதல்கள் போன்ற பிரச்சினைகளை ஆசிய சிங்கங்கள் எதிர்கொள்கின்றன.

வன உயிர்களை காப்பதன் மூலம் இயற்கையின் சம நிலையை பேணிக் காப்பதாலும், மக்களுக்கு  தேவையான நீர், காற்று, ஆரோக்கியம் போன்ற செல்வங்ளையும் பெறலாம் என்றார். வன விலங்குகளின்  உயிர்களை காப்பதுடன் காட்டு ராஜாவையும் அழிவில் இருந்து பாதுகாப்போம்.

More articles

Latest article