சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. தற்போது கொரோனாவின் 2வது அலை பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.. இந்த நிலையில்,  தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக மிரட்டி வரும் கொரோன வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு உலக நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பேரிழப்பு காரணமாக,  பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன், தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்பபடுத்தப்பட்டன. இதன் காரணமாக தொற்று பரவலும் கட்டுக்குள் வந்தது. ஆனால், 2021ம் ஆண்டு தொடங்கியது முதல் உருமாறிய நிலையில் புதிய  கொரோனா தொற்று பரவல் தொடங்கியது. தற்போது கொரோனாவின் 2வது அலை பரவி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை பிப்ரவரி மாதம் முதல் பரவி வருவதாக கூறும்  என சுகாதார நிபுணர்கள்  தற்போது இந்த புதிய கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது எனவும், தொற்றின் பாதிப்பு மே மாதம் வரை நீடிக்கும் என்றும்  எச்சரித்துள்ளனர்.

முன் எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தொற்று பரவலை எதிர்கொள்ள பொதுமக்கள்  முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை சுத்தமாகப் பேணுதல் போன்ற பழக்கவழக்கங்களை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள சுகாதாரத்துறையினர், பொதுமக்கள் மெத்தனம் காரணமாக, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறியதால்தான்    தொற்று பாதிப்பபு மீண்டும் உச்சம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

தொற்று பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள  45 வயதுக்கு மேற்பட்டோர் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர்.

அதன்படி,

1.  பின் கழுத்து வலி
2. கண்கள் எரிச்சல் சிவக்கும் தன்மை
3. தொண்டை வறட்சி
4. வயிற்றுப்போக்கு
5. விரல்கள் நகங்களின் நிறம் மாறுதல்
6. தீவிர தலைவலி
7. தோள்களில் அரிப்பு

போன்றவை தென்படுபவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளனர்.

முன்பு பரவிய கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு 

1. காய்ச்சல்
2. மூச்சு விடுவதில் சிரமம்
3. வரட்டு இருமல்
4. வாசனை சுவை இல்லாமல் போவது போன்ற அறிகுறிகள் மட்டுமே தென்பட்ட நிலையில், தற்போது பரவி வரும் கொரோனாவின் அறிகுறிகள் வித்தியாசமாக உள்ளது.