தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் டெல்லி இமாம் தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்து கிராமத்தை ஒருவர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பி வந்திருந்த நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி காரணமாக  அவர் மற்றும்  அவரது குடும்பத்தினர் 5 பேரும் கடந்த சில  நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

ஆனால், கொரோனா அறிகுறி இருந்த நபருக்கு இருமல் குறையாக காரணத்தால், அவரையும், அவரது குடும்பத்தினரையும்  மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க, அந்த பகுதி சுகாதார ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் சுகாதாரக்குழுவினர் சென்றிருந்தனர்.

அப்போது, அவர்கள் மீது அந்த பகுதி மக்கள் தாக்குதல் நடத்தி, சுகாதார ஆய்வாளரை தாக்கி, செல்போன் மற்றும் பைக்கை சேதப்படுத்தி அவரை அவதூறாக பேசியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்தனர்.படுகாயம் அடைந்த காளிராஜ், கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

இதுகுறித்து,  காவல்துறையினர் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, சுகாதாரப்பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய  காவல்துறையினர் முயன்று வந்தனர். இதையறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த பலர் தலைமறைவாகினர்.

இதைத்தொடர்ந்து,  2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒளிந்து இருந்ததை அறிந்து, அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அதில்,  அனிஷ், மைதீன்,ஆசிக், யூசுப், நவாஸ்கான், ஜலால் ஆகிய 6 பேர் செய்யப்பட்டனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.