டில்லி:
இந்தியாவில் பல நகரங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன், பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவதற்காக 100 பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா மற்றும் பல்வேறு இயக்கங்களின் தீவிரவாதிகள் அடிக்கடி இந்திய எல்லையில் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதி களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்திய எல்லை மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும். நமது வீரர்களை மீது எதிர் தாக்குதல் நடத்துவார்கள். அப்போது இந்திய வீரர்களின் கவனம் பாகிஸ்தான் ராணுவம்மீது இருக்கும் என்பதால், அந்த சமயத்தில் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிவிடுவார்கள்.
பாகிஸ்தானின் இந்த சதிச்செயலை புரிந்துகொண்ட இந்திய ராணுவத்தினர் தற்போது உஷாராக உள்ளனர்.
இந்நிலையில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமான இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று தனது இயக்கத்தைதச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு, உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்திய எல்லையில் வீரர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ரோத்துபணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.