சென்னை,

ழக்கறிஞரை தாக்கிய புகாரின் பேரில் நடிகர் சந்தானம்  முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்தானத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் வழக்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

நகைச்சுவை நடிகர் சந்தானம், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கண்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் சேர்ந்து முன்றாம் கட்டளையில் திருமண மண்டபம் கட்டுவதற்காக  மூன்று கோடி ரூபாய் முன்பணம் தந்ததாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்று கொண்ட நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம், மண்டபத்தைக் கட்டித்தராமல் இழுத்தடித்து வந்தாராம்.  இந்த விவகாரம் குறித்து பேச  சண்முகசுந்தரத்தை சந்திக்க சந்தானம் சென்றுள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது  அங்கு வந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாகியிருக்கிறது. பிரேம் ஆனந்தை சந்தானம் அடித்துள்ளார். இதனால் அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

இதுகுறித்த புகாரின்பேரில், சந்தானம் மீது வளசரவாக்கம் போலீசார் மூன்று3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடி வந்தனர்.

இதன் காரணமாக தலைமறைவான சந்தானம் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, நடிகர் சந்தானத்துக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்ததனையுடன்  ஜாமின் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.