சென்னை

டிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கை குடும்ப நல நீதிமன்றம் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு முன்னணி நடிகரான தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

அண்மையில்  இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்த விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சென்னை குடும்ப நல நீதின்றத்தில் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி விராணைக்கு வந்த போது. இந்த வழக்கு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகாததால் விசாரணையை வரும் 19 ஆம் தேதி ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]