சென்னை:

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  இருப்பதாகவும், ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக  நீலகிரி, விருதுநகர், தேனி, நெல்லை உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும், அவேளையில், ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும்.பொதுமக்கள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும், பயணங்களை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை யாக 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-05-20

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி!
நீர் இருப்பு : 9.40 அடி
நீர் வரத்து : Nil
வெளியேற்றம் : 4.75 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 47.05 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 66.43 அடி
நீர் வரத்து : 8
கனஅடி
வெளியேற்றம் : 300 கன அடி