விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ விரைவில் தந்தையாகப் போகிறார்.

இதுகுறித்த அறிவிப்பை அவரது மனைவியும் ‘சோன்பப்டி’ படத்தின் மூலம் நடிகையாக அறியப்பட்ட ப்ரியா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2014 ம் ஆண்டு நவம்பர் மாதம் ப்ரியா – அட்லீ திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கர்ப்பிணி-யாக உள்ளதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அட்லீ தந்தையாகப் போவது குறித்த தகவல் வெளியானதை அடுத்து அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

நயன்தாரா, ஆர்யா, ஜெய் நடிப்பில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் ‘ஜவான்’ என்ற இந்தி திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.