
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளரும், திமுக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சுமார் 1.25 லட்சம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
இத்தொகுதி, அதிமுக கூட்டணியில், பாமகவிற்கு ஒதுக்கப்பட்டபோதே ஐ.பெரியசாமி எளிதாக வெல்வார் என்று பேசப்பட்டது. இந்நிலையில், எதிர்பார்க்கப்பட்டதையும்விட, தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் ஐ.பெரியசாமி.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவின் திலகபாமா உள்ளிட்ட இதர அனைத்து வேட்பாளர்களுமே டெபாசிட் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel