பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நடிகை அதுல்யா இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரு பொறுக்கி நாய்கள் செய்யும் விஷயத்தால் ஒரு சில நல்ல பசங்க பெயரும் கெட்டு விடுகிறது. மேலும் இதுபோன்ற தவறு மற்ற நாட்டில் நடந்தால் என்ன தண்டனை கொடுப்பார்களோ அதே தண்டனை இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறி பெண்களையும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.