காஞ்சிபுரத்தில் தற்போது பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை என்று இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் பனீந்தர ரெட்டி கூறியுள்ளார்.
அத்திவரதரை காண்பதற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சிரமப்படுவதால், அத்திவரதரை இடமாற்ற வேண்டும் என்று பக்தர்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் பனீந்திர ரெட்டி, ”வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு உள்ள ஐதீகத்தை மாற்ற முடியாது. பக்தர்களின் கோரிக்கை குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.